எட்டையபுரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா - வின் 77 வது பிறந்தநாள் விழா - அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
அதிமுக பொதுச் செயலாளர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த தினம் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் எட்டயபுரத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
முன்னாள் அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ, ஆலோசனையின் பேரில் எட்டயபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில் அவைத்தலைவர் கணபதி, வார்டு செயலாளர்கள், கார்டன் பிரபு, சின்னத்துரை, கருப்பசாமி,சிவா ஜெயக்குமார், சீனா என்ற முத்துகிருஷ்ணன், சொக்கன், சிவசங்கர பாண்டியன், மூர்த்தி, செல்வி, சாந்தி, மாவட்ட கழக நிர்வாகிகள் வேலுச்சாமி, மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.