முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா எம் ஜி ஆரின் 108 வது பிறந்த நாள் விழா - முன்னாள் அதிமுக எம் ஜி ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் சீனிராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!

முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா எம் ஜி ஆரின் 108 வது பிறந்த நாள் விழா - முன்னாள் அதிமுக எம் ஜி ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் சீனிராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!

கோவில்பட்டியில் அதிமுக சார்பில் அதிமுக நிறுவனத் தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா பொன்மன செம்மல் எம் ஜி ஆரின் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்படிருந்த எம்ஜிஆர் ன் திருவுருவ படத்திருக்கு அதிமுக முன்னாள் அதிமுக எம் ஜி ஆர் இளைஞர் அணிதுணை செயலாளர் சீனிராஜ் தலைமையில் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து வருகின்ற 2026 ம் ஆண்டிற்கான சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுக வை அமோகமாக வெற்றி பெற செய்து பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமியை முதலமைச்சர் அரியணையில் அமத்துவோம் எனவும் அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

பின்னர் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சிவபெருமாள் BA. BL மாவட்ட இளைஞரணி கோமதி நாயகம் ,மற்றும் அதிமுக நிர்வாகிகள் செந்தூர் பாண்டியன், அய்யதுரை பாண்டியன் , கோபி, பாஸ்டின், முத்துராமலிங்கம், உத் தன்ராமன், நாகராஜ், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.