முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டி - வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கீதா ஜீவன் பரிசுகளை வழங்கினார்.
முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு - தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டியை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் - தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான த கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சான்றிதழ்களை வழங்கினார்.
இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேச்சுப்போட்டி நடுவர்களாக மதிமாறன், புதுக்கோட்டை விஜயா, இந்திரகுமார் தேரடி, பொள்ளாச்சி உமாபதி, சிவ ஜெயராஜன் ஆகியோர் பணியாற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன் வரவேற்புரை ஆற்றினார். தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம் நன்றியுரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர திமுக இளைஞர் அணி அமைப்பாளர் அருண் சுந்தர் மற்றும் வடக்கு - தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மாநகர இளைஞர் துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.