திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா நாளை கொடியேற்றம்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா நாளை கொடியேற்றம்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வெகுவிமர்ச்சையாக கொண்டாடப்படும் மாசிப் பெரும் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகின்றது. 

12.நாட்கள் திருவிழா நடைபெரும் இத்திருவிழாவில் 5ம் திருவிழா 1.3.23 அன்று குட வருவாயில் தீபாராதனையும் 3.3.23 அன்று மாலை சிகப்பு சாத்தி தங்க சப்பரத்தில் சுவாமி ஷண்முகர் திருவீதி உலாவும், 4.3.23 அன்று காலை சுவாமி ஷண்முகர் பச்சை சாத்தி சப்பரத்தில் திருவீதி உலாவும் நடைபெறுகின்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 6.3.23 அன்று தேரோட்டம் நடைபெறுகின்றது. 7.3.23 அன்று தெப்ப உற்சவம் நடைபெறுகின்றது. 

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.