விளாத்திகுளதில் பேருந்து வழித்தடம் நீடிப்பு: பேரூராட்சி தலைவர் சூர்யா அய்யன்ராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

விளாத்திகுளதில்  பேருந்து வழித்தடம் நீடிப்பு: பேரூராட்சி தலைவர் சூர்யா அய்யன்ராஜ்  கொடியசைத்து  துவக்கி வைத்தார்.

விளாத்திகுளம் முதல் பேரிலோவன்பட்டி வழியாக மேலநம்பிபுரத்திற்கு புதிய பேருந்து வழித்தடத்தினை விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரி முத்து விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு  தலைமையில் விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி முன்னிலையில் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ்  கொடியசைத்து  துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் விளாத்திகுளம் பணிமனை கிளை மேலாளர் கிருஷ்ணகுமார் பேரூர் கழகத் துணைச் செயலாளர் மீனாட்சிசுந்தரம்,மாவட்ட பிரதிநிதிகள்  கிருஷ்ணகுமார்,கனகவேல் பேரூர் கழக பொருளாளர் சரவணன், வார்டு செயலாளர்கள் ஸ்டாலின்கென்னடி,சுப்புராஜ், வெங்கடேஷ்,மாரிராஜ், முத்துமாரியப்பன் வார்டு கவுன்சிலர்கள் வெங்கடேஷ்,செல்வகுமார் விளாத்திகுளம் பணிமனை  கிளைச்செயலாளர் மாரிமுத்து,தொமுச சுப்பையா,அப்புரெட்டி, கிருஷ்ணமூர்த்தி,முத்துராஜ், கனகரத்தினராஜ்,மாரிமுத்து,மாரியப்பன், சுரேஷ்குமார், 2-வது வார்டு ஆறுமுகம்,ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆர்ட்ஸ் கண்ணன்,  விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.