முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் காபடி போட்டி முன்னாள் அமைச்சர் சி.த.செல்ல பாண்டியன் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட துப்பாஸ் பட்டியில் மறைந்த முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு S.D.குட்டி ராஜா & இளைய நிலா & நியூ பிரண்ட்ஸ் நடத்தும் மாபெரும் மின்னொளி கபாடி போட்டியை
துபாஸ்பட்டி ஞானப்பிரகாசியர் திடலில் அதிமுக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையேற்று துவக்கி வைத்தார்.
S.D.குட்டி ராஜா & இளைய நிலா & நியூ பிரண்ட்ஸ் நடத்தும் மாபெரும் மின்னொளி கபாடி 08.04.23 09.04.23ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது.
இந்த மாபெரும் கபாடி போட்டி நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் M.C.P ஜீவா பாண்டியன்,வட்ட செயலாளர்கள் மில்லர் R L ராஜா,துரைசிங்,அரசு போக்குவரத்து கழக மண்டல இணை செயலாளர் P.சங்கர், வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன், வட்ட பிரதிநிதி மணிகண்டன், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி ஊர்க்காவலன்,ராஜா,அரசு,ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விளையாட்டு போட்டி ஏற்பாடுகளை மாரியப்பன்,மாடசாமி,பேச்சிராஜா,தங்கமாரியப்பன்,மருதபெருமாள்,அருள்தாஸ்,முருகன்,சந்தனகுமார்,சுந்தர்ராஜன்,சியோன் அசோக் குமார்,மாரியப்பன்,ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.