மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றத்தில் தலைவர் சரவணக்குமார் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா!

மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றத்தில் தலைவர் சரவணக்குமார் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா!

தமிழக அரசின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு தலைமை அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட ஊராட்சி, மாநகராட்சி, நகராட்சி, ஒன்றிய அலுவலகம், பேருராட்சி, ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தமிழர் திருநாளான பொங்கல் விழாவினை சமத்துவ பொங்கல் விழாவாக கொண்டாடப்பட வேண்டுமென்று அரசு துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றம் சார்பில் கரும்பு, மஞ்சள் மற்றும் பல வகையான காய்கனிகளை வைத்து பானையில் பொங்கலிட்டனர். இதில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன் சங்க தலைவரும் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமார் பொங்கல் பானையில் அரிசியிட்டு சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் மகேஸ்வரி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தமிழ்செல்வி, ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்: மகேஸ்வரி காமராஜ், ஜீனத்பீவி பாரதிராஜா, பாலம்மாள், தங்கபாண்டி, சக்திவேல், உமா மகேஸ்வரி, தங்க மாரிமுத்து, சேசுராஜா, பெலிக்ஸ், ராணி, ஊராட்சி மன்ற உறுப்பினரும் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளருமான ஸ்டாலின், பங்கு தந்தை நெல்சன்ராஜ், பங்கு தந்தை வின்செண்ட், திமுக ஒன்றிய துணை செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், அந்தோணி செல்வராஜ், ஆனந்த், ஜெயசீலன், மூர்த்தி, கௌதம், ஊராட்சி மன்ற செயலாளர் ஜெயக்குமார், மாப்பிள்ளையூரணி ஊராட்சி தூய்மை காவலர்கள் மற்றும் பல்வேறு பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தமிழர் திருநாளான பொங்கல் விழாவினை முன்னிட்டு ஒருவருக்கொருவர் தங்களது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழச்சியை பரிமாறிக் கொண்டனர்.