தூத்துக்குடியில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியல் : 95 பேர் கைது!

தூத்துக்குடியில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியல் : 95 பேர் கைது!

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி பழைய பேருந்து நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட 95 பேரை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அனல் நிலையங்களில் ஒப்பந்த பணியாளராக நீண்ட காலமாக பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு தூத்துக்குடி திட்ட தலைவர் மரியதாஸ் தலைமையில்  மறியல் போராட்டம் நடைபெற்றது.

சிஐடியு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து மறியலை துவக்கி வைத்தார்.

அனல் மின் நிலையங்களில் தொடர்ச்சியாக மின்வாரிய பணிகளில் பணியாற்றக்கூடிய ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்திட வேண்டும், அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும், 10 ஆண்டுகள் வேலை செய்த ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரப்படுத்துவோம் என்ற திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வருகை பதிவேடு பராமரித்திட வேண்டும், அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் இல்லை என்று அறிக்கை அனுப்புவதை கைவிட வேண்டும், ஊதிய உயர்வு வேலைப்பலு பேச்சுவார்த்தைகளில் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை பேசி தீர்வு கண்டிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் ஈடுபட்டனர்.

இதில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ரவி தாகூர், மின் ஊழியர் மத்திய அமைப்பு திட்ட செயலாளர் குன்னி மலையான், தெர்மல் அனல் நிலைய  திட்டச் செயலாளர் கணபதி சுரேஷ், திட்ட தலைவர் கென்னடி, திட்ட பொருளாளர் ராமையா நிர்வாகிகள் யோவான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.