வாக்காளர் பட்டியலில் திருத்த முகாம் - ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நேரில் பார்வையிட்டார்.

வாக்காளர் பட்டியலில் திருத்த  முகாம் - ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நேரில் பார்வையிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க.ஸ்டாலின் தமிழ்நாடு துணை முதலமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது ஆணைக்கிணங்க.

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் ஆகியோரது வழிகாட்டுதலின்படியும்.

ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியம் ஒட்டநத்தம் ராமானுஜம் இந்து நாடார் தொடக்கப்பள்ளி, கல்லத்திக்கிணறு R C.தொடக்கப்பள்ளி, ஓசநூத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,புதியம்புத்தூர் இந்து நாடார் தொடக்கப்பள்ளி,புதியம்புத்தூர் R C.துவக்கப்பள்ளியில், நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் முகாமை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழக துணை செயலாளர் லட்சுமணன் மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஞானதுரை மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் தங்கவேல்சாமி ஒன்றிய செயற்குழு உறுப்பினர் கொண்டல் சுப்பையா ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் கோபால் ஒன்றிய ஆதிதிராவிடர் அணி கருப்பசாமி இளைஞரணி பார்த்திபன் கிளை செயலாளர்கள் ஜான் ஆரோக்கியசாமி பாக முகவர்கள் சுப்பையா ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.