பூமி பாதுகாப்பு தினம்- மேயர் ஜெகன் பெரியசாமி மரங்கன்றுகளை நட்டினார்.
பூமி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள ஹெரிடேஜ் பூங்காவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மரங்கன்றுகளை நட்டினார்.
அதனை தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையிலும் ஆணையர் தினேஷ் குமார் முன்னிலையிலும் அதிகாரிகள் அலுவலர்கள் பணியாளர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், உதவி ஆணையர் சேகர், மாமன்ற உறுப்பினர்கள் சரவணகுமார்,பொன்னப்பன், இசக்கி ராஜா, ஸ்ரீனிவாசன் அரசு அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், தனியார் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.