டாக்டர் சிவந்தி ஆதித்தனார் 10ம் ஆண்டு நினைவு தினம் - நாம் இந்தியர் கட்சி சார்பில் ஜெய்கணேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் 10ம் ஆண்டு நினைவு தினம் - நாம் இந்தியர் கட்சி சார்பில் ஜெய்கணேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

நாம் இந்தியர் கட்சியின் மாநில தலைவர் என்.பி. ராஜா  அறிவுறுத்தலின்படி பத்மஸ்ரீ டாக்டர்.சிவந்தி ஆதித்தனார் 10 ம் ஆண்டு  நினைவு தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தன் கல்லூரி வளாக மணிமண்டபத்தில் அமைந்துள்ள சிவந்தி ஆதித்தனின் திருவுருவச் சிலைக்கு  நாம் இந்தியர் கட்சியின் பொருளாளர் ஜெய்கணேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர், வடக்கு மாவட்ட செயலாளர் கருப்பசாமி, தெற்கு மாவட்ட துணை செயலாளர் ராஜ், தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் சரவணன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் வேல்ச்சாமி, ஒன்றிய தலைவர் ரமேஷ் பாலன் ,ஒன்றிய இளைஞரணி செயலாளர் சுரேஷ் பெருமாள், சாத்தான்குளம் ஒன்றிய செயலாளர் எழில் வண்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.