தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் டூவிபுரம் ரேஷன் கடை - அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் இயங்கி வந்த நியாயவிலை கடை இடமாற்றம் செய்யப்பட்டு, டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது இந்த நியாய விலை கடையை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து பொது மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 30 வது வார்டு டூவிபுரம், மணி நகர், அண்ணாநகர் மற்றும் திம்மையார் காலனி ஆட்டோ காலனி பகுதியின் நியாயவிலை கடையானது புதிய பேருந்து நிலையம் அருகில் இயங்கி வந்தது சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் சென்று நியாய விலை கடை பொருட்கள் வாங்க வேண்டிய நிலையில் பொதுமக்கள் இருந்தனர்.
இந்த நிலையில் நியாய விலை கடை தங்களுக்கு தூரமாக இருப்பதாகவும், அந்த நியாயவிலை கடையை பொதுமக்கள் நலன் கருதி டூவிபுரம், மணி நகர், அண்ணாநகர் ஆகிய ஏதேனும் ஒரு பகுதியில் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்தார்.
பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் புதிய பேருந்து நிலையம் அருகில் இயங்கி வந்த தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 30 வது வார்டு டூவிபுரம், மணி நகர், அண்ணாநகர் பகுதிக்கான நியாயவிலை கடையை, டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில், தனது சொந்த செலவில் அமைச்சர் கீதாஜீவன் அமைத்து கொடுத்தார்.
அதனை தொடர்ந்து இந்த நியாய விலை கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு நியாய விலை கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு அரிசி பருப்பு எண்ணெய் சீனி உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் பகுதி செயலாளர் ரவீந்திரன் மாமன்ற உறுப்பினர் அதிர்ஷ்ட மணி தூத்துக்குடி வட்ட வழங்கல் தனி வட்டாட்சியர் ஜஸ்டின் செல்லத்துரை, கூட்டுறவு மேலாண்மை உற்பத்தியாளர்கள் விற்பனை சங்க மேலாளர் பட்டுராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.