சுதந்திர போராட்ட வீரர் தேர் மாறன் பாண்டியாபதி பிறந்த நாளை முன்னிட்டு வம்சாவளியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடியில் இன்று மாலை சுதந்திர போராட்ட வீரர் தேர் மாறன் பாண்டியாபதின் 261 வது பிறந்த நாளை முன்னிட்டு தனியார் பள்ளி வளாகத்தில் உள்ள தேர் மாறனின் கல்லறை நினைவிடத்தில் பாண்டியாபதி தேர்மாறன் வம்சாவளியை சார்ந்த பெயர் சேர்த்துக் கொள்ளவும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் :-
1. தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சுதந்திரப் போராட்ட தியாகி தேர்மாறன் பாண்டியபதி பெயரை சூட்ட வேண்டும்.
2. தேர் மாறனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் அமைத்து, தேர் மாறனின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.
3. மத்திய அரசு சுதந்திர போராட்ட வீரர் தேர்மாறன் பாண்டியாபதி நினைவாக தபால் தலை வெளியிட வேண்டும்.
4. தூத்துக்குடி மாநகராட்சி தேமாறன் பாண்டியாபதி வாழ்ந்த பகுதி கடற்கரை சாலைக்கு தேர்மாறன் பாண்டியாவதி சாலை என பெயர் சூட்ட வேண்டும்.
5. டிசம்பர் 13 சுதந்திர போராட்ட வீரர் தேர் மாறன் பாண்டியாபதி பிறந்த தினமாக அறிவிக்க வேண்டும்.
என்று சுதந்திர போராட்ட வீரர் தேர் மாறன் பாண்டியாபதி வம்சாவளியை சார்ந்த பெயர் சேர்த்துக் கொள்ளவும் மத்திய மாநில அரசாங்கத்தை வலியுறுத்துவதாக செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.
நிகழ்ச்சியில் தலைமை பரதர் நலச் சங்கம் முன்னாள் தலைவர் பீட்டர் பெர்னான்டோ, பாண்டியா பதி தேர்மாறன் வாரிசுதாரர் லிகோரி மோத்தா, பாத்திமாநகர் பங்கு தந்தை யேசுதாஸ், பாண்டியாபதி மன்னர் கல்லறை மீட்பு குழு நிர்வாகிகள் அந்தோணிசாமி, இன்னாசி, பெல்லா, விஜயகுமார், தமிழக வெற்றிக் கழகம் செவனர்,தமிழக மீனவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் கோல்டன் பரதர், இந்தியர் மீனவர் சங்க மாவட்ட செயலாளர் பிரசாத் மாவட்ட தலைவர் ஜேசுராஜா, நிர்வாகிகள் சுமன், விக்னேஷ், நியூட்டன், அஸ்மிலன், அதிஷ்டன்,பரதவர் முன்னேற்ற பேரவை பொதுச் செயலாளர் ரோக் பெர்னான்டோ, மாவட்டச் செயலாளர் வார்னர், இளைஞர் அணி தலைவர் பாலன், துணைத் தலைவர் பிரேம் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.