டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் பங்கேற்பு.
டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் தூத்துக்குடி ஆரோக்கிய புரத்தில் உள்ள விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளி நடைபெற்றது .
டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் என்சிசி மாணவிகளின் தமிழ் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக சமூக பணியாளர் ரோசாரி பாத்திமா கலந்து கொண்டனர் விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கணக்கரத்தினமணி வரவேற்புரை ஆற்றினார்.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆறுமுக நயினார் டெங்கு காய்ச்சல் பற்றியும் டெங்கு எவ்வாறு உருவாகிறது என்பது பற்றியும் மாணவ மாணவிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று கருத்துரைகளை வழங்கினார்.
டாக்டர் ரேணுகா மாவட்ட புகையிலை தடுப்பு அலுவலர் டெங்கு காய்ச்சலை பற்றியும் அதிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது பற்றியும் எடுத்துரைத்தார். மேலும் நமது வீட்டின் அருகே வசிக்கக் கூடிய மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து உறுப்பினர்கள் பாரதிராஜா,ஸ்டாலின், அருண்குமார்,சுரேஷ், பள்ளி செயலாளர் நேர்முக உதவியாளர் சாகுல் ஹமீது, மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
தமிழ் ஆசிரியை செல்வ முத்துலட்சுமி நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை என் சி சி ஆசிரியர் ஆல்பன் சிறப்பாக செய்திருந்தார்.