தூத்துக்குடியில் தமிழக ஆளுநரை கண்டித்து சமத்துவ மக்கள் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்-சமத்துவ மக்கள் கழகத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணன் பங்கேற்பு!.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அன்மையில் தமிழ்நாடு குடிமை பணியாளர் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவர்கள் மத்தியில் பேசும்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இந்தியாவின் 40 சதவீத காப்பர் தேவையை பூர்த்தி செய்து வந்தது.
ஆனால் வெளிநாட்டிலிருந்து நிதி வாங்கிக்கொண்டு உள்ளூர் மக்களை நிறுவனத்திற்கு எதிராக தூண்டி விட்டு போராட்டம் நடத்தி, ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடி விட்டார்கள் எனவும் ஆளுநருக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்கள் குறித்து
சர்ச்சைக்குரிய வகையில் பேசினார் 13 பேர் சுட்டு கொலை செய்யப்பட காரணமாக இருந்த ஸ்டெர்லைட் ஆலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தும் ஆளுநரை திரும்ப பெற கோரியும் தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் நடைபெற்றது.
சமத்துவ மக்கள் கழகத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அற்புதராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சமத்துவ மக்கள் கழகத்தின் மாநில தலைவர் எர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டு உரையாற்றினார்
தொடர்ந்து ஆளுநர் ரவிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள் தமிழகத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டம் நடத்திய பொதுமக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி உள்ள ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழையும் தமிழகத்தையும் காப்பதற்காக பாடுபட்டு வருகிறார் ஆனால் ஆளுநர் ரவி தமிழக சட்டமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து வருகிறார் இதை கண்டித்தும் தூத்துக்குடி மக்களின் தன்னெழுச்சி போராட்டமான ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையிலும் பேசி வரும் ஆளுநர் ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
இந்த ஆர்ப்பாட்டத்தில் தென் மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார்,மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாநில துணை பொதுச்செயலாளர் காமராசு நாடார்,மாநில கலை இலக்கிய அணி செயலாளர் அந்தோணி பிச்சை,மாவட்ட அவை தலைவர் கண்டிவேல்,மாவட்ட செயலாளர் டேனியல் ராஜ்,மாவட்ட பொருளாளர் சுப்பையா,சமக மாவட்ட பொருளாளர் பழனிவேல், மாவட்ட துணைச் செயலாளர் அருள்ராஜ்,மாவட்ட வழக்கறிஞரணி செயலாளர் சகாயராஜ்,மாவட்ட துணைச் செயலாளர் அந்தோணி சேவியர், மில்லை தேவராஜ்,மாவட்ட மாணவர் அணி செயலாளர் அகஸ்டின் கேப்ரியல், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம்,தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் ஜோசப்,ரெக்ஸ்,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார்,மாவட்ட விவசாய அணி செயலாளர் சரவணன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் விக்ரம்,மாநகரச் செயலாளர் உதயசூரியன்,மாவட்ட மகளிர் அணி செயலாளர் குருவம்மாள், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ராஜன்,மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் ஜெகன்,மாவட்ட பிரதிநிதிகள் பெரியசாமி,முருகேசன், வின்சென்ட், முத்துக்குமார்,மற்றும் மாவட்ட, மாநகர,ஒன்றிய,பேரூர் கழக, வார்டு கிளைக் கழக,சார்பு அணி, நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.