தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் அத்துமீறும் ஆளுநரையும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!.

தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் அத்துமீறும் ஆளுநரையும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!.

தூத்துக்குடி பிப்ரவரி 08

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அத்துமீறும் ஆளுநரையும் ஒன்றிய அரசையும் கண்டித்து தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டு மாநில உரிமைகள் மீதான தாக்குதலையும் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி பகிர்வை வஞ்சிப்பதாகவும் இ டி,ஐ டி, போன்ற ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்புகள் மூலம் எதிர்கட்சி தலைவர்களை பழிவாங்குவதாகவும் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசையும் ஆளுநரையும் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதில் ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா தூத்துக்குடி திமுக மாநகர செயளாலர் ஆனந்த சேகரன் காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் முரளிடதரன் மற்றும் அனைத்து கட்சியினை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.