ஓட்டப்பிடாரத்தில் ஒன்றிய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் - திமுக ஒன்றிய செயலாளர் இளையராஜா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

திராவிட முன்னேற்ற கழக தலைமை கழகத்தின் அறிவிப்பின் படி திமுக தலைவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்திரவின் படி தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, துணை முதல்வர், திமுக இளைஞர் அணி செயலாளர், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் ஆலோசனையின் படி ஊராட்சிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் நிதி பாக்கியை தராத ஒன்றிய அரசை கண்டித்து ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் நாளை 29.03.2025 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஓட்டப்பிடாரம் மெயின் பஜார் தேரடி திடல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
எனவே திமுக நிர்வாகிகள் ஒன்றிய, கிளைகழகம், வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒன்றிய அணி நிர்வாகிகள், அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தவறாது கலந்து கொள்ளுமாறு ஒட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா அறிக்கை வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார்.