தெய்வச்செயல்புரம் நாரைக்கிணறு புளியம்பட்டி சாலையில் உயர் மட்ட பாலம் - சண்முகையா எம்எல்ஏ ஆய்வு.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் மருதன்வாழ்வு ஊராட்சி நாரைக்கிணறு சி. எம்.நடுநிலைப்பள்ளியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாஆய்வு மேற்கொண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்தும் மற்றும் மதிய உணவுகளின் தரம் குறித்தும் மற்றும் பள்ளியின் அடிப்படை வசதிகள் குறித்தும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து தெய்வச்செயல்புரம் - நாரைக்கிணறு - புளியம்பட்டி சாலையில் புதிதாக கட்டப்பட்டு மற்றும் உயர்மட்ட பால பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் N. புதூர் ஆயிரங்காத்தான் அக்காநாயக்கன்பட்டி செல்வகுமார்மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.