தூத்துக்குடியில் கீரை வியாபாரி மரணம்-சமக தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.
தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் அண்ணா சிலை அருகில் மடத்தூரை சேர்ந்த கீரை வியாபாரம் செய்து வந்த விவசாயி ஜெயகணேசன் மின்சாரம் தாக்கி எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.
இன்று தூத்துக்குடிக்கு வருகை தந்த சமக தலைவரும் நாடார் பேரவை மாநில தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவருமான எர்ணாவூர் நாராயணன் ஏழ்மை நிலையில் இருந்து வரும் அவரது மனைவி லிங்க சிவா மற்றும் குழந்தைகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.
இந்த நிகழ்வில் சமத்துவ மக்கள் கழகம் மாநில பொருளாளர் வக்கீல் கண்ணன்,மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ்,நாடார் பேரவை தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் பரமசிவன்,தெற்கு மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார்,மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல்,மாவட்ட பொருளாளர் பழனிவேல் துணைச் செயலாளர் அருள்ராஜ்,பொதுக்குழு உறுப்பினர் ஜோசப்,பிரதிநிதிகள் பெரியசாமி, முருகேசன், முத்துக்குமார்,மாநகரச் செயலாளர் உதயசூரியன், வர்த்தக அணி செயலாளர் சிவசுமுத்துக்குமார்,தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், உடன்குடி ஒன்றிய செயலாளர் பாலாஜி,உட்பட கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.