தூத்துக்குடி மக்கள் பாசக்காரர்கள் கனிமொழி கருணாநிதியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற புதிய சகாப்தம் படைக்க பாடுபடுவோம் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மேயர் ஜெகன் பேச்சு..!

வியாபாரிகள் மத்தியில் திமுகவிற்கு நல்ல வரவேற்பு.தூத்துக்குடியில் அக்கா கனிமொழி-யை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து புதிய சகாப்தம் படைக்க பாடுபடுவோம் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மேயர் ஜெகன் பேச்சு..!
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி மீண்டும் போட்டியிடுகிறார்.. இவரை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என மேயர் ஜெகன் தினமும், காலையும், மாலையும் வீதி, வீதியாக சென்று மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகிறார். இதே போன்று மாமன்ற உறுப்பினர்களும் அவரவர் பகுதிகளில் மக்களை சந்தித்து வாக்குகள் கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றி தந்த திட்டங்கள் மற்றும் தூத்துக்குடியில் ஆற்றிய களப்பணிகளை மக்களிடம் எடுத்து கூறி வாக்குகளை பெற ஏதுவாக மேயர் ஜெகன் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டமானது, புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கீதா ஹோட்டலில் வைத்து நடைபெற்றது.கூட்டத்தில், மேயர் ஜெகன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அவரவர்கள் கருத்தை எடுத்து கூறினர்..
பின்னர், இறுதியாக மேயர் ஜெகன் பேசுகையில், தூத்துக்குடி மக்கள் பாசக்காரர்கள், 2 வருடங்களில் பல்வேறு பணிகளை மக்களுக்கு செய்து கொடுத்துள்ளோம். சாலை வசதி, மின்விளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுத்துள்ளோம்.. மேலும், பொது மக்களின் வசதிக்காக 5 ம் ரயில்வே கேட் வரவுள்ளது. இதனால் மக்கள், போக்குவரத்து இடைஞ்சல் இல்லாமல் எளிதாக சென்று வர முடியும்... இதே போன்று தூத்துக்குடி மாநகரில் பல்வேறு அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்துள்ளோம்… ஆகவே மாமன்ற உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் இத்திட்டங்களை முன் வைத்து வாக்குகள் கேட்க வேண்டும்.
வியாபாரிகள் மத்தியில் திமுகவிற்கு நல்ல வரவேற்பு உள்ளது.. ஆகவே, தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி அவர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து புதிய சகாப்தம் படைக்க நாம் பாடு பட வேண்டும் என்றார்.
இதில் மண்டல தலைவர்கள் அன்னலட்சுமி, கலைச்செல்வி, திமுக மாநகர துணை செயலாளர்கள் கனகராஜ் எம்.சி, கீதா முருகேசன் எம்.சி, மாவட்ட பிரதிநிதி இசக்கிராஜா எம்.சி, சண்முகபுரம் பகுதி செயலாளர் சுரேஷ்குமார் எம்.சி, அண்ணாநகர் பகுதி செயலாளர் ரவீந்திரன், அனைத்து திமுக கவுன்சிலர்கள், மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் சந்திர போஸ், எடிண்டா , கற்பகக்கனி, கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் முத்துமாரி, தனலட்சுமி, மதிமுக உறுப்பினர் ராமு அம்மாள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் மும்தாஜ், மற்றும் திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் கோர்ட் ராஜா சிஎஸ்.ராஜா, வட்ட செயலாளர் ரவீந்திரன், பகுதி பிரதிநிதி பிரபாகர், முன்னாள் கவுன்சிலர் பெரியசாமி, முன்னாள் வட்ட செயலாளர் மாரியப்பன்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.