தூத்துக்குடி ஆவின் பால் நிறுவன அலுவலத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் திடீர் ஆய்வு!

தூத்துக்குடி ஆவின் பால் நிறுவன அலுவலகத்தில் பால்வளத் துறை அமைச்சர் ச.மு.நாசர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வு மேற்கொண்டதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் ச.மு.நாசர் பேசியதாவது ஆவின் பால் தட்டுப்பட்டு இன்றி பொது மக்களுக்கு கிடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் பால் குறைவான அளவு விநியோகம் செய்வதாக எழுந்த புகார்களை தொடர்ந்து பால்வளத் துறை அமைச்சர் ச.மு. நாசர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் தூத்துக்குடியில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆவின் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பால் விநியோகம் குறைந்துள்ளது குறித்து அதிகாரியிடம் விவரம் கேட்கப்பட்டது தீடீர் என குறைவான அளவில் பால் கிடைப்பது குறித்து அதிகாரிகள் அமைச்சரிடம் விளக்கம் தெரிவித்தனர். தொடர்ந்து பால் விநியோகத்தில் பொது மக்களுக்கு எந்த ஒரு குறைபாடும் இல்லாத வகையில் ஆவின் பால் விநியோகம் செய்யப்பட வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டாதாகவும் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் ச.மு.நாசர் இந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் பால் உற்பத்தி குறைவாக உள்ளதால் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அது சரி செய்யப்பட்டுள்ளது.
ஒரு சில இடங்களில் போக்குவரத்தில் ஏற்பட்ட சில மாற்றங்களால் வினியோகம் காலதாமதம் ஏற்பட்டது. அதுவும் சரிசெய்யப்பட்டது மூன்று விதமான ஆய்வுகளுக்கு பிறகு பால் வினியோகம் செய்யப்படுவதால் பால் அளவு குறைவாக இருப்பது என்று சொல்வது தவறான தகவல் என்வும் நாளை முதல் முறையாக அவன் பால் வினியோகம் நடைபெறும் எனவும் கோடைகாலம் வரஉள்ளதால் ஆவினில் கூடுதலான விதவிதமான ஐஸ்கிரீம்கள் தயார் செய்யப்பட உள்ளன. கலப்படம் இன்றிபால் வழங்கப்படுகிறது.
பொதுமக்கள் சேவைக்காக ஆவின் நிறுவனம் இயங்கி வருகிறது லாபம் மட்டும் நோக்கம் அல்ல என தெரிவித்தார் பால் வினியோகத்தில் எந்தவிதமான சமரசம் செய்யாமல் முறையாக பொது மக்களுக்கு பால் விநியோகம் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி,தூத்துக்குடி மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ்குமார்,ஆவின் மேலாண் இயக்குநர் சுப்பையன்,மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.