DYFI போதையற்ற தமிழ்நாடு முழக்கத்தினை முன்வைத்து நடைபெறும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் DYFI போதையற்ற தமிழ்நாடு முழக்கத்தினை முன்வைத்து நடைபெறும் கையெழுத்து இயக்கம் தூத்துக்குடி ஒன்றியம், புதுக்கோட்டை பகுதியில் ஒன்றிய தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் சுரேஷ் மற்றும் மின் ஊழியர் மத்திய அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரவி தாகூர் ஆகியோர் இணைந்து துவக்கி வைத்த இயக்கத்தில் முன்னாள் DYFI மாவட்ட துணை தலைவர் சங்கரன், வியாபாரிகள் சங்கத் தலைவர் பீட்டர், மாவட்ட பொருளாளர் மனோஜ், மாவட்ட துணை செயலாளர் ஜேம்ஸ், புதுக்கோட்டை பகுதி DYFI தலைவர் ஆவுடையப்பன், மீன்வளக் கல்லூரியில் பணியாற்றும் CITU மாரியப்பன், பள்ளி மாணவ, மாணவிகள் என பலரும் பங்கேற்று கையேழுத்திட்டனர்.