திமுகவின் 75 ஆம் ஆண்டு பவளவிழா - செப்டம்பர் 15 வீடுகளில் கழகக் கொடியேற்றி கொண்டாடிட ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அழைப்பு.
திராவிட முன்னேற்றக் கழகம் துவங்கப்பட்டு 75 ஆம் ஆண்டு கொண்டாடும் வகையில் வருகின்ற செப்டம்பர் 15 9 2024 அன்று கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வீடுகளில் கழகக் கொடியேற்றி கொண்டாட வேண்டும் என ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கி 75 ஆம் ஆண்டை கொண்டாடும் வகையில் திமுக தலைவர்,தமிழ்நாடு முதலமைச்சர் மு க.ஸ்டாலின் ஆணைக்கிங்க செப்டம்பர் 15 ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து ஒன்றிய/நகர/பகுதி/ கிளை கழகங்களில் தங்கள் வீடுகளில் திராவிட முன்னேற்ற கழகத்தின் கொடியை ஏற்றி கொண்டாடிடுமாறு கழக நிர்வாகிகளையும் , தொண்டர்களுக்கும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.