திமுக ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன் மீது பணத்தைப் பெற்றுக் கொண்டு நில மோசடி செய்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஓட்டப்பிடாரம் முன்னாள் யூனியன் துணை பெருந் தலைவர் காசி விஸ்வநாதன் மீது பணத்தை பெற்றுக் கொண்டு நில மோசடி செய்வதாக புகார் மனு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் பொது மக்களின குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு திங்கட்கிழமையன்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுவது வழக்கம் அதனடிப்படையில் இன்று பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்டமானது ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஓட்டப்பிடாரம் முன்னாள் யூனியன் துணை பெருந்தலைவர் காசி விஸ்வநாதன் மீது பணத்தைப் பெற்றுக் கொண்டு நில மோசடி செய்ததாக ஆட்சியர் இளம்பகவத் திடம் நேரில் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது.
ஆட்சியரிடம் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது :-
சிவராஜ் என்கிற நான் கடந்த 2007 ஆம் ஆண்டு கக்கரம்பட்டியை சேர்ந்த வேலு அவர்களின் குமாரர் காசி விஸ்வநாதன் (ஒட்டப்பிடாரம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஓட்டப்பிடாரம் யூனியன் முன்னாள் துணை பெருந்தலைவர்) இருந்து ஓட்டப்பிடாரம் வட்டம் பாஞ்சாலங்குறிச்சி கிராமம் சர்வே எண் 513/3 புஞ்சை ஹெக்டேர் 1.21.5 க்கு ஏக்கர் 3 ஜெனரல் பவர் பத்திரம் பெற்றுள்ளேன்.
நிலத்தை விற்பனை செய்வதற்காக தெற்கு பரும்பூர் வ.உ.சி காலனி என்ற முகவரியில் வசித்து வரும் பெருமாள் மகன் முருகன் என்பவரிடம் இருந்து கிரையத்தொகையை பெற்று மேற்கண்ட திமுக ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதனிடம் கிரையத்தொகை 2,26,000 ரூபாயை கடந்த 30.04.2007 ம் ஆண்டு கொடுத்து விட்டேன்.
என்னிடம் இருந்து நிலத்திற்கான முழு தொகையை பெற்றுக்கொண்ட கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் காசிவிஸ்வநாதன் (10.8.2024) அன்று ஓட்டப்பிடாரம் சார் பதிவாளர் அலுவலக ஆவண எண் 2403/2024 மூலம் பொது அதிகார பத்திரத்தை ரத்து செய்துவிட்டார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்து ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்த சூழ்நிலையில் நான் தற்போது இது சம்பந்தமாக திமுக ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதனை நேரில் சென்று பார்த்து இடத்திற்கான முழு தொகையையும் கொடுத்து விட்டேன். ஆனால் தாங்கள் என்னிடம் பணத்தை பெற்றுக்கொண்டு பவர் பத்திரத்தை ரத்து செய்து விட்டீர்கள் என்று கேட்டபோது.
நான் ஆளும் கட்சியில் ஒன்றிய செயலாளர் என் ஏரியாவுக்குள்ள வந்து என்னையே கேள்வி கேக்குறியா உனக்கு பணமும் கிடையாது, சொத்தும் கிடையாது, உயிரோடு போவதற்கு வழியை பாரு என்று காசி விஸ்வநாதன் என்னை மிரட்டினார்.
எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் என மனு மீது விசாரணை செய்து ஆளும் கட்சி ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன் மீது ஏமாற்று வேலை,பண மோசடி, கொலை மிரட்டல், ஆகிய பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்து எனது பணத்தையும் எனது நிலத்தையும் மீட்டு தர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.