தூத்துக்குடியில் திமுக இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் -கனிமொழி எம்பி அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு!.
திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் தூத்துக்குடி டுவிபுரம் பகுதியில் நடைபெறற்து.
இந்த சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் எம்பி கனிமொழி கருணாநிதி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் ஆகியோர் திமுக அரசின் சாதனை குறித்து பேசினார்கள்.
அப்போது பேசிய கனிமொழி கருணாநிதி கடந்த அதிமுக ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை தான் பதவியில் இருக்க வேண்டும் என்ற வகையில் ஆட்சி நடத்தினார்கள் ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த உடன் மு க ஸ்டாலின் மக்களை பாதுகாக்கும் வகையில் ஆட்சி நடத்தி வருகிறார் பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகை செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது
பெண்கள் படிக்க வேண்டும் என்ற வகையில் திருமண உதவி திட்டத்தை கொண்டு வந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலைவர் கலைஞர் கனவு நிறைவேறி உள்ளது உயர் கல்விக்கு செல்லக்கூடிய மாணவ மாணவியருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி பெண் கல்வியை உயர்த்தி பிடித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் என தெரிவித்தார்.
இந்த திட்ட மூலம் ஆயிரக்கணக்கான பெண்கள் தற்போது உயர்கல்விக்கற்க வந்துள்ளனர் இதுபோல் பெண்கள் கடட்ணம் இல்லா பேருந்து பயணம் என்பது பெண் விடுதலைக்கான திட்டம் பெண்கள் எங்கு செல்வது என்றாலும் யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டிய நிலை இல்லை வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் இதன் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் முதல் மிச்சப்படுத்தி தங்களின் மற்ற தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்கள் என பெருமிதம் தெரிவித்த கனிமொழி எம்பி எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற வகையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார் என தெரிவித்தார்.
தொடர்ந்து கடவுள்களையும் கோயில்களையும் காப்பதாக சொல்லிக் கொள்ளும் பாஜகவும் ஆளுநர் ரவி ஒன்றும் செய்யவில்லை ஆனால் திராவிட மாடல் ஆட்சி தான் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் சொத்துக்களை மீட்டுள்ளது
திராவிட மாடல் காலாவதி ஆகவில்லை ஆளுநர் பதவி தான் காலாவதி ஆனது திராவிடம் என்பது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதாகும் திராவிடம் தான் அனைவரையும் படிக்க வைத்தது இந்த திராவிடத்தை காலாவதியாக்கும் முயற்சிகள் நடக்கிறது அது ஒருபோதும் இங்கு நடைபெறாது எனவும் இதுபோல் பேசிக் கொண்டு இருப்பவர்களை மக்கள் ஓட ஓட விரட்டும் காலம் விரைவில் வரும் என தெரிவித்தார்
இந்த பொதுக்கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் தூத்துக்குடி மாவட்ட துணை செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ்,மண்டல தலைவர்கள் நிர்மல் ராஜ், கலைச்செல்வி,அன்னலட்சுமி , உள்பட கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் என பெரும் திரளாக கலந்து கொண்டனர்..