தூத்துக்குடி 3 வது மையில் பகுதியில் திமுக சார்பில் கோடைக்கால நீர் மோர் பந்தலை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி 15 வது வார்டுக்கு உட்பட்ட 3 வது மையில் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி, இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சரும் திமுக மாநில இளைஞரணி செயலாளருமான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆணைக்கிணங்க, கோடை கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் வடக்கு மாவட்ட செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன் இதில் கலந்துகொண்டு தலைமை தாங்கி நீர்மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு மோர்,பழரசம், தர்பூசணி இளநீர் சர்பத் ஆகிய குளிர்பானங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் கவுன்சிலர்கள் இசக்கிராஜா, பொன்னப்பன்,சரவணகுமார், தொண்டரணி முருக இசக்கி மருத்துவர் அணி அருண்குமார், சுற்றுச்சூழல் அணி மகேஸ்வரன் சிங், உள்பட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.