திமுக இளைஞரணி துணை செயலாளர் வழக்கறிஞர் தூத்துக்குடி ஜோயல் பிறந்தநாள் ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடப்பட்டது!.
தூத்துக்குடியில் திமுக மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் பிறந்தநாள் விழாவானது இன்று அவரது ஆதரவாளர்களால் மாவட்டம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு புதுக்கோட்டை அருகேயுள்ள கூட்டாம்புளி பகுதியில் அமைந்துள்ள அன்பு உள்ளங்கள் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சாயர்புரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் பொன் சேகர் தலைமையில் காலை மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.
அப்போது மாவட்ட திமுக பிரதிநிதி பேய்க்குளம் ஜெயக்குமார், ஏரல் பேரூராட்சி முன்னாள் தலைவர் கண்ணன், மற்றும் டியோடின் ஐசக், செல்வம், மாரிமுத்து, சுதன், முடிவைத்தானந்தல் கண்ணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து தூத்துக்குடி பி.என்.டி. காலனியில் அமைந்துள்ள பிளஸ்சிங் முதியோர் இல்லத்திற்கும் அறு சுவையுடன் கூடிய மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏ.பி.ஆர். ஜோ, டினோ, தினேஷ், வள்ளிக்கண்ணன், அபிருத், பிரகாஷ், துரைபாண்டி, தாவீது, அருண், நந்து, ஹரி, அபிமன்யூ, சுசி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இறுதியாக தூத்துக்குடி லூசியா ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்ற இளைஞரணி நிர்வாகிகள் ஆதரவற்ற மாற்று திறனாளி மாணவ, மாணவிகள் உடன் கேக் வெட்டி, மாற்று திறனாளி மாணவ, மாணவிகளுக்கு அறு சுவையுடன் கூடிய மதிய உணவு வழங்கி சிறப்பாக கொண்டாடினர். இதில் வழக்கறிஞர் பால்துரை, சேக்முகமது, ஜோ, மட்டக்கடை சகிலன், ஆனந்த், பாரதி, கரண், சுபாஷ், தளபதிமுருகன், நடராஜன் புதுக்கோட்டை சிவா உட்பட பலர் உடன் இருந்தனர்.