திமுக இளைஞரணி துணை செயலாளர் வழக்கறிஞர் தூத்துக்குடி ஜோயல் பிறந்தநாள் ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடப்பட்டது!.

திமுக இளைஞரணி துணை செயலாளர் வழக்கறிஞர் தூத்துக்குடி ஜோயல் பிறந்தநாள் ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடப்பட்டது!.

திமுக இளைஞரணி துணை செயலாளரும் வழக்கறிஞருமான ஜோயல் பிறந்தநாள் மார்ச் 16 ம் தேதி இன்று தூத்துக்குடியில் இளைஞரணி சார்பில் லூசசயா ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மீள விட்டான் சாலையில் அமைந்துள்ள லூசியா ஆதரவற்றோர் இல்லத்தில் திமுக இளைஞரணி மட்டக்கடை சகிலன் மற்றும் முருகன் தலைமையில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.

பிறந்தநாள் கேகில் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இளைஞர் அணி துணை செயலாளர் வழக்கறிஞர் ஜோயல் புகைப்படமும் வரைப்பட்டு இருந்து கேக்கை சகிலன் மற்றும் முருகன் கூட்டாக பிறந்தநாள் கேக்கை வெட்டியும்  ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு அறுசுவை மதிய உணவையும் வழங்கி மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

பிறந்தநாள் கேக் வெட்டும் பொழுது ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகள் ஜோயலுக்கு பிறந்தநாள் வாழ்த்து பாடல் மூலம் தங்களது வாழ்த்து தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாநகரம் முழுவதும் இளைஞரணி துணை செயலாளர் ஜோயலை வாழ்த்தி  வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் இளைஞர் அணியினர் பெருவாரியாக கலந்து கொண்டனர்.