திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பி பிறந்தநாள் - யூனியன் சேர்மன் எல். ரமேஷ் தலைமையில் முதியோர் இல்லத்தில் அறுவை உணவு வழங்கி கொண்டாடப்பட்டது.

திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பி பிறந்தநாள் - யூனியன் சேர்மன் எல். ரமேஷ் தலைமையில் முதியோர் இல்லத்தில் அறுவை உணவு வழங்கி கொண்டாடப்பட்டது.

திமுக துணை பொதுச் செயலாளர் பாராளுமன்ற குழு துணை தலைவர் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான துணைப் கனிமொழி கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளருமான எம் சி.சண்முகையா வழிகாட்டுதலின்படி பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியம் புளியம்பட்டி பதுவா முதியோர் இல்லம் கே.கைலாசபுரம் ரோசாரி முதியோர் இல்லத்தில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் தலைமையில் வயது முதிர்ந்தவர்களுக்கு இனிப்புடன் கூடிய அறுசுவை மதிய உணவு வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மாடசாமி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருண்குமார் ஒன்றிய மீனவரணி அமைப்பாளர் ஆரோக்கியராஜ் ஒன்றிய தொழிலாளர் அணி அமைப்பாளர் கருப்பசாமி ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் விக்னேஷ் ஒன்றிய கவுன்சிலர்  ஜெயலட்சுமி ஊராட்சி மன்ற தலைவர் அய்யாத்துரை ஒன்றிய மகளிரணி துணை அமைப்பாளர் ராமலட்சுமி கிளைச் செயலாளர்கள் ராஜ் ராமநாதன் இளங்கோ முருகன் மகளிரணி காளியம்மாள் நித்யா மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.