திமுக பாஜக தான் கள்ளக் கூட்டணி வைத்திருக்கிறது - சிவசாமி வேலுமணி ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் தூத்துக்குடியில் இபிஎஸ் பரபரப்பு பேச்சு.
நாங்கள் நினைத்தால் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியும். ஆனால் அதை நாங்கள் செய்யவில்லை. நாங்கள் என்றுமே மக்களுடன் தான் கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி, தூத்துக்குடியில் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து இன்று மாலை தேர்தல் பிரசாரம் செய்தார்.
தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தூத்துக்குடி அதிமுக பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக கள்ளக்கூட்டணி வைத்ததாக பேசுகிறீர்களே அதற்கான ஆதாரம் உள்ளதா?.
திமுகவுடன் பாரதிய ஜனதா கள்ளக்கூட்டணி வைத்தற்கான ஆதாரத்தை வாக்களப் பெருமக்களாகிய உங்களிடம் காட்டுகிறேன் என்று பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மு க ஸ்டாலின் உடன் இருக்கும் புகைப்படத்தை காட்டினார். பிரதமர் தமிழகம் வந்தபோது, முதல்வராக இருந்த நான் பல் இளித்தேன் என்கிறார் உதயநிதி. நீ என்ன பண்ணிட்டு இருக்க? நீயும் அதேதான பண்ணிட்டு இருக்க? நீ சிரிச்சா சரி, நான் சிரிச்சா தப்பா? என்று கேள்வி எழுப்பினார். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கோ பேக் மோடி என்று தமிழகம் முழுவதும் விளம்பர போர்டுகளை வைத்து எதிர்ப்பை காட்டினீர்களே? ஆனால் இன்று வெல்கம் மோடி என்று கூறுகிறீர்களே.
தூத்துக்குடி வெள்ளப்பாதிப்பின்போது மக்களுக்கு வேண்டிய உதவிகளை உடனடியாக செய்து கொடுத்தது அதிமுக தான். ஏற்கனவே மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்தும் அதனை கண்டு கொள்ளாமல் இருந்தார்கள்." இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசி வேட்பாளர் சிவசாமி வேலுமணி ஆதரித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
பொது கூட்டத்தில் கலந்து கொள்ள தூத்துக்குடிக்கு படையெடுத்த அதிமுக தொண்டர்கள் இந்த படை போதுமா என கேட்கும் அளவிற்கு தொண்டர்களிடம் உற்சாகம் காணப்பட்டது.