மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விழா - 1 கோடியே 50 லட்சத்திற்கான காசோலைகளை யூனியன் சேர்மன் ரமேஷ் வழங்கினார்.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விழா - 1 கோடியே 50 லட்சத்திற்கான காசோலைகளை யூனியன் சேர்மன் ரமேஷ் வழங்கினார்.

மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் தற்சார்பு பொருளாதாரத்தில் மகளிர் தங்களை தாங்களே மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு அரசின் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிட்டாரம் வட்டார மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விழா ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 1 கோடியே 50 லட்சத்திற்கான காசோலைகளை மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வழங்கினார்.

மேலும் திராவிட மாடல் அரசில் மகளிருக்காக அளிக்கப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு எடுத்துக்கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் யூனியன் ஆணையாளர் வசந்தா வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன் மாவட்ட மகளிர் திட்ட உதவி அலுவலர் கனகராஜ் SBI ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலைய ஒருங்கிணைப்பாளர் தினேஷ் மணி மகளிர் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் லட்சுமி மற்றும் மகளிர் திட்ட அலுவலர்கள் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.