நாட்டின் 76 வது குடியரசு தினம் - அக்காநாயக்கன்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் எம் சி.சண்முகையா எம்எல்ஏ பங்கேற்பு!..

ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் அக்காநாயக்கன்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் எம் சி.சண்முகையா ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா கலந்து கொண்டு கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பொது மக்களிடம் கேட்டறிந்தார்.
மேலும் பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் மற்றும் மின்சாரம் போன்றவற்றை தடையின்றி வழங்குவதற்கு அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.அதனைத் தொடர்ந்து காசநோய் மற்றும் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழிகளை சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா முன்னிலையில் பொதுமக்கள்உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் யூனியன் ஆணையாளர் சசிகுமார்,வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன்,நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் திலிப்குமார், வருவாய் ஆய்வாளர் ராஜேஷ்,கிராம நிர்வாக அலுவலர் நாராயணன், வட்டார கல்வி அலுவலர் பவணந்திஸ்வரன், வட்டார சுகாதார ஆய்வாளர் காளிமுத்து,வட்டார மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமி,குழந்தைகள் வளர்ச்சி திட்டம் நாகம்மாள்,தலைமை ஆசிரியர்கள் ஜெயக்கொடி,புவனேஸ்வரி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஈஸ்வரி,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அய்யாத்துரை, ஒன்றிய மகளிரணி துணை அமைப்பாளர் ராமலட்சுமி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கணேசன்,தகவல் தொழில்நுட்ப அணி ரமேஷ், இளைஞரணி மகேஷ்,ஆகாஷ்,மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.