தூத்துக்குடியில் துப்புரவு தொழிலாளர்களிடம் கமிஷன் கேட்கும் கவுன்சிலர்கள் மாநகராட்சி அதிகாரிகள்-மேயர் நடவடிக்கை எடுக்க சிபிஎம் கோரிக்கை.
தூத்துக்குடி மாநகராட்சியில் குப்பையே அல்லாத கவுன்சிலர்களுக்கும்,மாநகராட்சிஅதிகாரிகளுக்கும்,காண்டிராக்டில் பணிபுரியும் சூப்பர்வேஷர்களுக்கும் குப்பை அள்ளி பணம் கொடுக்க வேண்டுமா நாங்கள் என துப்புறவு தொழிலாளர்கள் புலம்பல் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க சிபிஎம் கட்சி தூத்துக்குடி புறநகர செயலாளர் ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி 4 மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது இதில் தெற்கு மண்டல பகுதிகளில் மட்டும் 24 வண்டிகளில் சுமார் 120 தூய்மை பணியாளர்கள் தினந்தோறும் காலை 6மணி முதல் மாலை 3மணி வரை வீடு தோறும் சென்று அன்றாடம் வாங்குகிற குப்பைகளில் பிளாஸ்டிக் பால் பாக்கெட் கவர், சிரட்டைகள், பாட்டில்கள்,இரும்புதுண்டுகள் போன்ற மறுசுழற்சி குப்பைகளாக வருவது வழக்கம்.
இது போன்று வரும் பொருட்களை பழைய இரும்புக்கடைகளில் தினசரி தூய்மை பணியாளர்கள் அவர்களுக்கு அருகாமையில் உள்ள பழைய இரும்பு கடைகளில் கொடுத்து டீ செலவிற்காகவும், போக்குவரத்து செலவிற்காகவும், 50 ரூபாயோ, 100 ரூபாயோ, பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த 4 மாத காலமாக தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாக அதிகாரிகளும்,கவுன்சிலர்களும் நீங்கள் பொறுக்குகிற குப்பைகளை நான் சொல்லுகிற பழைய இரும்பு கடைகளில் தான் கொடுக்க வேண்டும் என்று மிரட்டி அதன் மூலம் இரும்பு கடைகளில் வண்டிக்கு 200 ரூபாய் கமிஷன் என 24 வண்டிக்கு நாள் ஒன்றுக்கு 4800 ரூபாய் 30நாட்களுக்கு 1,44,000 ரூபாய் அடித்து பெறுகின்ற பணத்தை மாநகராட்சி நிர்வாகமும் கவுன்சிலர்களும் பங்கு போட்டு கொள்கின்றனரா என்பது தெரியவில்லை மாநகராட்சி நிர்வாகம் இத்தகைய போக்கை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.
துப்புறவு பணியாளர்களை அவர்களுடைய அருகாமையில் உள்ள இரும்பு கடைகளிலேயே மறுசுழற்சி குப்பைகளைப் கொடுக்க அனுமதிக்க வேண்டும்.
மேலும்,தூய்மை பணியாளர்களுக்கு ESI, EPF கிடையாது,வார விடுமுறை கிடையாது, பண்டிகை காலங்களிலும் விடுமுறை கிடையாது, 8 மணி நேரம் உறுதி செய்யப்பட்ட வேலையும் கிடையாது,எந்தவித சலுகையும் இல்லாத தூய்மை பணியாளர்களை தொடர்ந்து மிரட்டி கொத்தடிமையாக்கும் முயற்சியை உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும்.
குப்பையே அல்லாத கவுன்சிலர்களுக்கும்,மாநகராட்சி,அதிகாரிகளும்,காண்டிராக்டில் பணிபுரியும் சூப்பர்வேஷர்களுக்கும் குப்பை அள்ளி பணம் கொடுக்க வேண்டுமா என்று புலம்பி தவிக்கின்றனர் துப்புறவு தொழிலாளர்கள்.
எனவே இந்த விஷயத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டுமென சிபிஎம் கட்சி சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.