அக்காநாயக்கன்பட்டி கிராமத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி - எம் சி.சண்முகையா எம்எல்ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் அக்காநாயக்கன்பட்டி ஊராட்சி அக்காநாயக்கன்பட்டி கிராமத்தில் காலனித் தெரு, வடக்கு மற்றும் தெற்கு தெருக்களில் 35 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் யூனியன் முன்னாள் சேர்மன் எல்.ரமேஷ்,காவல் துணை கண்காணிப்பாளர் குரு வெங்கட்ராஜ்,யூனியன் ஆணையாளர் சசிகுமார் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன்,உதவி பொறியாளர் பால நமச்சிவாயம்,பணி மேற்பார்வையாளர் சங்கர்,வருவாய் ஆய்வாளர் ராஜேஷ்,கிராம நிர்வாக அலுவலர் நாராயணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருண்குமார், துணை அமைப்பாளர் கணேசன், ஒன்றிய மகளிரணி துணை அமைப்பாளர் ராமலட்சுமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அய்யாத்துரை,இளைஞரணி மகேஷ்,,ஆகாஷ், மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.