கொல்லங்கிணறு அரசு உயர்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டிடம் கட்டும் பணி - எம்எல்ஏ எம் சி.சண்முகையா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் கொல்லங்கிணறு அரசு உயர்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 46 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டிடம் கட்டும் பணியினை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு எம் சி.சண்முகையா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் முன்னாள் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ், பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் அரவிந்த்,பள்ளி தலைமை ஆசிரியர் சுடலைமணி ,உதவி தலைமை ஆசிரியர் முத்துப்பாண்டி,ஆசிரியர்கள் ஷீலா, சோபனா, தேவிகா,சின்னத்துரை,பணி மேற்பார்வையாளர் சங்கர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருண்குமார், ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் விக்னேஷ்,ஒன்றிய மாணவரணி கார்த்திக், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லதா முருகன், ஊராட்சி செயலர் பாலசுப்பிரமணியன், கிளை செயலாளர் குமார், அரசு ஒப்பந்ததாரர் கருப்பசாமி, மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள், கலந்து கொண்டனர்.