எட்டயபுரத்தில் ஜெயலலிதா - வின் நினைவு தினம் அனுசரிப்பு!
எட்டயபுரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் பட்டத்து விநாயகர் கோவில் அருகில் அவரது உருவப்படத்திற்கு அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் மலர் தூவி மரிசாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் அதிமுக வார்டு செயலாளர்கள் கருப்பசாமி, ரத்தினம், சிவா, பிரபு, செல்வி, சாந்தி, சின்னத்துரை, கார்த்தி, மோகன், மாவட்ட பிரதிநிதி வேலுச்சாமி, அதிமுக அவை தலைவர் கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.