உணவுப் பொருள் விற்பனை செய்யும் ஹோட்டல் , 9444042322 காட்சி படுத்த வேண்டும் ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவு.
உணவுப் பொருள் விற்பனை செய்யும் உணவகங்கள் , பேக்கரிகள் , மளிகைக் கடைகள் , சூப்பர் மார்க்கெட்கள் உள்ளிட்ட அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்புத் துறையின் புகார் சேவை எண்ணைக் காட்சிபடுத்திடல் வேண்டும்.தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் அறிவுறுத்தல்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உணவுப் பொருள் விற்பனை செய்யும் ஹோட்டல் , உணவகங்கள் , பேக்கரிகள் , மளிகைக் கடைகள் , சூப்பர் மார்க்கெட்கள் உள்ளிட்ட அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்புத் துறையின் புகார் சேவை எண்ணைக் காட்சிபடுத்திடல் வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் , அறிவுறுத்தியுள்ளார்,
மாவட்ட ஆட்சித் தலைவர் அவரது செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : தூத்துக்குடி மாவட்டத்தின் உணவு வணிக நிறுவனங்களில் கொள்முதல் செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் , பாதிக்கப்பட்ட நுகர்வோர் உணவு பாதுகாப்புத் துறையில் புகார் பதிவு செய்யும்பட்சத்தில் , உரிய ஆதாரங்களைத் திரட்டி வழக்கு பதிவு செய்ய உணவு பாதுகாப்புத் துறைக்கு உதவியாக இருக்கவும்.
சில வணிகர்கள் தங்களது வளாகத்தில் , உணவு பாதுகாப்புத் துறையின் புகார் பிரிவின் எண்ணை நுகர்வோர்களுக்குத் தெரியும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளனர் .ஆனால் , பெரும்பாலான உணவு வணிகர்கள் அவ்வாறு அப்புகார் எண்ணை காட்சிப்படுத்தவில்லை . இதன் விளைவாக , நுகர்வோர் தாம் வாங்கிய உணவுப் பொருளில் தரக்குறைபாடு காணப்பட்டாலோ அல்லது உணவுப் பொருள் கெட்டுப்போயிருந்தாலோ , சம்பந்தப்பட்ட உணவு வணிகரிடம் சில சமயங்களில் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படுகின்றது .
அதுமட்டுமில்லாது ,சில சமயங்களில் சம்பந்தப்பட்ட உணவு வணிகரிடம் சில நபர்கள் சட்டத்திற்குப் புறம்பாக நஷ்டஈடு கோரியும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் , அவ்வப்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படுகின்றது .
எனவே , நுகர்வோருக்கு பாதுகாப்பான உணவு வழங்கப்படுவதைக் கண்காணிக்க நுகர்வோருக்குரிய உணவு பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சினைக்கு சட்டப்படியான தீர்வு காண வேண்டும் என்பதற்காகவும் , உணவு வணிக நிறுவனங்களில் பொது சுகாதாரத்தை மேம்படுத்தி , பாதுகாப்பான உணவு விற்கப்படுவதை உறுதி செய்யவும் , பொது சுகாதார நலனிற்கு ஊறுவிளைவிக்கும் வகையில் ஏதேனும் உணவு பாதுகாப்பு அவசர நிலை ஏற்படும்பட்சத்தில் , உரிய ஆதாரங்களை திரட்ட ஏதுவாகவும் , உணவு வணிகர்கள் மற்றும் நுகர்வோருக்கிடையே சுமூக உறவு நிலவவும் , உணவு வணிகர்கள் அனைவரும் , தங்களது வளாகத்தின் பணம் செலுத்துமிடத்தின் ( Cash Counter ) அருகில் உணவு பாதுகாப்பு குறித்து புகார் அளிக்க ஏதுவாக . “ 9444042322 " என்ற மாநில உணவு பாகாப்புத் துறை ஆணையர் அலுவலகத்தின் புகார் சேவை எண்ணை காட்சிப்படுத்திடல் வேண்டும் .
இந்த அலைபேசி எண்ணிற்கு புகார் அளிப்பவரது ரகசியம் காக்கப்படும். மேலும் , புகார் பெற்றுக்கொண்டதிலிருந்து 14 தினங்களுக்குள் , நடவடிக்கை விபரம் சம்பந்தப்பட்ட புகார்தாரருக்கு அலைபேசியின் வழி அனுப்பப்படும் . மேலும் , உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டிய குற்றமாக இருக்கும்பட்சத்தில் , அலைபேசி வழி புகார் அளித்தவர் , எழுத்துப்பூர்வமாகவும் புகார் அளிக்க வேண்டும் என்பதால் , சம்பந்தப்பட்ட நுகர்வோர் , மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலருக்கு எழுத்துப்பூர்வ புகார் அளிக்க வேண்டிய தேவை ஏற்படும் மற்றும் சாட்சியம் அளிக்கவும் நேரிடும் . எனவே , உணவு பாதுகாப்பை மேம்படுத்திட எடுக்கப்பட்டுள்ள அளிக்க வேண்டும் என்றும் , இந்நடவடிக்கைக்கு வணிகர்களும் நுகர்வோர்களும் ஒத்துழைப்பு நுகர்வோர்கள் இந்த புகார் சேவை எண்ணை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்திடல் வேண்டும் என்றும் இப்புகார் எண்ணை எவரேனும் , உள்நோக்கத்துடன் தவறாகப் . பயன்படுத்தியதாக விசாரணையில் தெரிய வந்தால் , சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவரது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார் .