தூத்துக்குடி சமக சார்பில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா - நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி சமக சார்பில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா -  நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் தேவர்புறம் ரோட்டில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அனைவருக்கும் கேக் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. 

விழாவில் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை தலைமை தாங்கினார் தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜோசப் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ் மாவட்ட துணைச் செயலாளர்கள் அந்தோணி சேவியர், சூசைமுத்து மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் ஜேசுசெல்வி மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் அந்தோணி ஜெபராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் ,நாடார் பேரவை மாவட்ட செயலாளர் டேனியல் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்டங்கள் வழங்கினார்கள். இவ்விழாவில் மாவட்ட பொருளாளர் பழனிவேல் மாவட்டத் துணைச் செயலாளர் அருள்ராஜ் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் முத்துக்குமார் மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம் மாவட்ட விவசாய அணி செயலாளர் கனகராஜ் மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர் துணைச் செயலாளர் ராஜகோபால் மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் குருவம்மாள், சந்திரா மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர்கள் சங்கரன் ,ராஜ் நாடார் தொழிலாளர் அணி துணைச் செயலாளர் முருகன் மாநகரச் செயலாளர் உதயசூரியன் அவைத்தலைவர் மதியழகன் தொழிற்சங்க செயலாளர் காமராஜ் வார்டு செயலாளர்கள் துரைச்சாமி, சந்தனராஜ் ,சண்முக குமார், செல்வராஜ், பார்த்திபன் ,சுந்தர், கணேசன், ராமஜெயம், செல்வராஜ் ,ராணி, ராசாத்தி, ராதா லட்சுமி, ஜெப ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.