தூத்துக்குடி மாநகராட்சி மாசிலாமணிபுரத்தில் பள்ளி குழந்தைகளுக்கு புருஸ்லி அகாடமி சார்பில் சிலம்பம் குத்துச்சண்டை பயிற்சி வகுப்பு - தூத்துக்குடி மாநகராட்சி பெண் கவுன்சிலர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சி மாசிலாமணிபுரம் 3 வது தெருவில் அமைத்துள்ள மாநகராட்ச்சி பூங்காவில் புருஸ்லி அகாடமி நிறுவணர் தலைமை பயிற்சியாளர் சுப்புராஜ், மீனா ஏற்பாட்டில் பள்ளி குழந்தைகளுக்கு சிலம்பம் மற்றும் குத்துச்சண்டை பயிற்சி வகுப்பு துவக்க விழா நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் விஜயலட்சுமி வைதேகி நாகேஸ்வரி ஜெயசீலி, பவாணி முத்துமாரி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் டுவின்கிள் பள்ளி தாளாளர் சுயம்பு லிங்கம் திமுக சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் TA. மகேஸ்வரன் சிங் விளையாட்டு துறை அமைப்பாளர் L.சில்வெஸ்டார் பிரையன்ட் நகர் மாநகர திமுக பிரதிநிதி செல்வம் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.