ஒட்டப்பிடாரம் மணியாச்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் - எம்எல்ஏ சண்முகையா கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மின் இணைப்பு மற்றும் மருத்துவ காப்பீடு பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.
தமிழக முதலமைச்சர் மு க.ஸ்டாலின் தொடங்கி வைக்கப்பட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் மணியாச்சி ஆர் சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணியாச்சி, கொல்லங்கிணறு, ஒட்டநத்தம் , மேலபாண்டியபுரம் மற்றும் பாறைக்குட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்
இம்முகாமில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற சண்முகையா கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மின் இணைப்பு மற்றும் மருத்துவ காப்பீடு பெறுவதற்கான ஆணை மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரியிடம் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
இம்முகாமில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் வட்டாட்சியர்கள் சுரேஷ் செல்வகுமார் சுசிலா வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி ஊராட்சி மன்ற தலைவர்கள் மாடசாமி லாத பிரேமா சரிதா கிளைச் செயலாளர்கள் இளங்கோ ரத்னவேல் முருகன் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.