தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா; தூத்துக்குடி ஜோயல் ஏற்பாட்டில் நேசகரங்கள் இல்லத்தில் உணவு வழங்கி கொண்டாடப்பட்டது.
திமுக மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் வழிகாட்டுதல்படி தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் இனிப்பு மற்றும் மதிய உணவு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி நேசக்கரங்கள் குழந்தைகள் இல்லத்திலுள்ளவர்களுக்கு மதியம் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தூத்துக்குடி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பால்துரை, பொருளாளர் சேக்முகமது, துணைத் தலைவர் நடராஜன், துணைச்செயலாளர்கள் தொழிலதிபர் காளி, புதுக்கோட்டை சிவமுருகன், மாநகர தலைவர் தொழிலதிபர் ஏபிஆர். ஜோ, துணை தலைவர் அருண், துணைச் செயலாளர் டினோ, துணை பொருளாளர் சுப்பிரமணியன் மற்றும் திமுக இளைஞர் அணி தொழிலதிபர் வசந்த், விமல்ஜி, நிர்வாகிகள் சிகிலன், முருகன், லிட்டில் ஆனந்த், பாரதி, தர்ஸ், சுபாஷ், கடல் பிரவின், ஆதிஆனந், அருண், சிவா, பிரவின், அஜன், அருள், காளி, உமாபதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.