சமூகநீதி போராளி இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் கட்ட அறிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்து செப் - 11அரசு விழாவாக அறிவிக்க மக்கள் நல அமைப்பின் அமைப்பாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் கோரிக்கை.
தூத்துக்குடி: செப்:11
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக ஓங்கி ஒலித்த சமூகநீதிப்போராளி - தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் 66 வது குரு பூஜை தினத்தை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தியாகி இமானுவேல் சேகரனாரின் 66 வது குருபூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரது திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னாரின் புகழை போற்றி வணங்கி பொதுமக்களுக்கு இனிப்புகளையும் மற்றும் மதிய உணவும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்களை தூத்துக்குடி மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் வழங்கினார்.
சமூகநீதி போராளி இமானுவேல் சேகரனுக்கு மூன்று கோடி மதிப்பில் மணிமண்டபம் கட்ட அறிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துக் கொண்ட அருணா தேவி ரமேஷ் பாண்டியன் செப் - 11ம் தேதி அரசு விழாவாக அறிவிக்க தூத்துக்குடி மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.