முதல்வர் மு.க. ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் விழா; விளாத்திகுளத்தில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் அறிவுறுத்தலின்படி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான மார்கண்டேயன்அவர்களின் வழிகாட்டுதலின்படி.
விளாத்திகுளம் பேரூர் திமுக சார்பில் விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையம் முன்பு செயலாளர் வேலுச்சாமி தலைமையிலும்,விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் முன்னிலையிலும்,விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதிகள், வார்டு செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.