குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு கையடக்க கணினி வழங்கும் விழா - சண்முகையா எம்எல்ஏ வழங்கினார்.

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வி துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் வட்டாரத்தில் வளமிகு வட்டாரங்கள் வளர்ச்சித் திட்டம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கையடக்க கணினி வழங்கும் விழா ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
இந்த விழாவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பதினோரு பள்ளிகளைச் சார்ந்த என்பது மாணவ மாணவிகளுக்கு கையடக்க கணினிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட திட்ட அலுவலர் முனியசாமி, பள்ளி தலைமை ஆசிரியை அன்னலட்சுமி, வட்டார கல்வி அலுவலர் பவனிந்தீஸ்வரன்,கிராம நிர்வாக அலுவலர் தடிக்காரன்,கழக முன்னோடிகள் ஜேக்கப், ஜார்ஜ்குட்டி, வெள்ளத்துரை, கோபால், கிருஷ்ணசாமி, கருப்பசாமி, மாடசாமி, ஆகியோர் கலந்து கொண்டனர்