புதியம்புத்தூரில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா - சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார்.

புதியம்புத்தூரில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா - சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார்.

ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் புதியம்புத்தூரில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ரூ.13.49 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ஆனந்த், யூனியன் ஆணையாளர் சசிகுமார், வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திலகவதி, வருவாய் ஆய்வாளர் ஸ்ரீரங்கபெருமாள், ஊராட்சி செயலர் உத்திரக்கனி,  ஒன்றிய கழக துணை செயலாளர் சிவன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முத்துக்குமார்,மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஞானதுரை, ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் காமராஜ், ஒன்றிய வர்த்தக அணி காளியப்பன், ஒன்றிய ஆதிதிராவிடர் அணி கருப்பசாமி, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் நல்லமுத்து,ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் ஜெயா,நகர செயலாளர் லிங்கராஜ், நெசவாளரணி ஈசன் சுரேஷ்,புதியம்புத்தூர் கிளைச் செயலாளர்கள் சற்குணபாண்டியன், பாலகுருசாமி,ராஜாவின் கோவில் கிளை செயலாளர் சிவமுருகன்,இளைஞரணி பார்த்திபன்,மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.