செக்காரக்குடி,மகிழம்புரம் கிராம மக்களின் 40 ஆண்டு கால கனவை நிறைவேற்றித் தந்த - சண்முகையா எம்எல்ஏ - மக்கள் மகிழ்ச்சி!.

செக்காரக்குடி,மகிழம்புரம்  கிராம மக்களின் 40 ஆண்டு கால கனவை நிறைவேற்றித் தந்த - சண்முகையா எம்எல்ஏ - மக்கள் மகிழ்ச்சி!.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் செக்காரக்குடி ஊராட்சி செக்காரக்குடி,மகிழம்புரம் , சாலையில் ரூ 2 கோடி மதிப்பீட்டில் புதிதாக மேம்பாலம் அமைக்கும் பணிக்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

செக்காரக்குடி,மகிழம்புரம் வழியாக பேரூரணி மங்களகிரி செல்லும் சாலையில் கடந்த 40 ஆண்டு காலமாக தரைதள பாலம் இருந்து வந்தது இந்த பாலத்தில் மழைக்காலங்களில் போதெல்லாம் இந்த பாலத்தை மூழ்கடித்து வெள்ளநீர் செல்வதால் அப்பகுதியில் வசிக்ககூடிய பொதுமக்கள் தூத்துக்குடிக்கு வேலைக்கு செல்வும், மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்வும், நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்வதற்கு பெரும் சிரமம் அடைந்து வந்தனர்.

 இந்த நிலையில் பாலத்தினை உயர்மட்ட மேம்பாலமாக அமைத்து தரும்படி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் இன்று புதிய பாலம் கட்டுவதற்காக ரூபாய் 2 கோடி மதிப்பில் புதிய உயர்நிலை மேல்மட்ட பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி சண்முகையா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

கோரிக்கையை நிறைவேற்றி தந்த எம்எல்ஏ சண்முகையா மக்கள் நெகிழ்ச்சி ;

எங்கள் பகுதி மக்கள் 40 ஆண்டு காலமாக தரைமட்ட பாலத்தில் வழியாகத்தான் அனைத்து வேலைகளுக்கும் சென்று வருகிறோம் மழைக்காலங்களில் நாங்கள் மிகுந்த சிரமம் அடைந்து வந்தோம் எங்களுக்கு உயர் மட்ட மேம்பாலம் அமைத்து தர கோரிக்கை வைத்திருந்த நிலையில் எங்களது 40 ஆண்டு கால கனவை  உடனடியாக நிறைவேற்றி தந்த ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவுக்கு அப்பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் அப்பகுதியில் வசிக்கக்கூடிய பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் தங்களது வீட்டில் மின்சாரம் இல்லை என்று எம்எல்ஏவிடம் தெரிவித்தார் உடனடியாக மின்வாரிய அதிகாரிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மின் இணைப்பு கொடுப்பது சம்பந்தமாக பேசி விரைவில் மின் இணைப்பு கொடுப்பதற்கு அதிகாரியிடம் வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து 100 நாள் வேலை செய்யும் பொதுமக்களிடம் குறைகளையும் தங்களது கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளையும் கேட்டறிந்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ரத்னா சங்கர், உதவி கோட்ட பொறியாளர் மலர்விழி, சாலை ஆய்வாளர்கள் ரமணி, இசக்கி ராஜா, மேற்கு ஒன்றிய செயலாளர் புதூர் எஸ்.ஆர். சுப்பிரமணியன் செக்காரக்குடி ஊராட்சி மன்ற, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஐயம் பெருமாள், ராமலெட்சுமி, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் முத்து லெட்சுமி நாராயணன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆறுமுகம், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் பலவேசம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பரியேரும் பெருமாள், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் வசந்த், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஆண்டி பிள்ளை (எ) அருண், கிளை கழக செயலாளர் குறுக்கலாஞ்சி கருப்பசாமி, தொழில்நுட்ப அணி ஐஸ் மாரியப்பன், விவசாய சங்க தலைவர் அரசு ஒப்பந்த காரருமான அலங்காரம்,மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள்,பொது மக்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.