மகளிருக்கு ரூ.50,000/- வழங்க மத்திய அரசின் முடிவு.
மத்திய அரசானது மகளிரின் முன்னேற்றத்திற்காக ரூ.50 ஆயிரத்தை அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் கீழ் கடனாக வழங்க முடிவு செய்துள்ளது.
மகளிருக்கான ரூ.50 ஆயிரம்:
இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி மத்திய அரசானது பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களுக்காக செயல்படுத்திக் கொண்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசானது அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் கீழ் மகளிருக்கு சுயதொழில் கடனை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் படி, கேட்டரிங் ஆரம்பிக்க விரும்பும் மகளிரை ஊக்குவிக்கும் விதமாக ரூ.50,000/- கடனாக வழங்கப்பட உள்ளது.
இந்த கடன் தொகையை திரும்ப செலுத்த தொழில் முனைவோருக்கு சுமார் 3 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படும். இக்கடனுக்கான வட்டியானது சந்தையை பொறுத்து மாறுபடும். இந்த கடன் தொகையை மகளிர் தங்களது தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்தி தானும் முன்னேற வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். இதனை பெற விரும்பும் நபர்கள் கூடுதல் தகவலுக்கு SBI வங்கியின் கிளைகளை தொடர்பு கொள்ளலாம். மேலும் SBI வங்கியின் மூலமாகவே தங்களது கடன் தொகையையும் பெற்றுக்கொள்ளலாம்.