தென் மாவட்டங்களில் தொடரும் சாதி ரீதியான கொலைகள் - சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட எஸ்பி-யிடம் அருணாதேவி கோரிக்கை மனு!.
தென் மாவட்டங்களில் தொடர்ந்து ஜாதி ரீதியான கொலைகள் நடைபெற்று வருவதாகவும், அதனை தடுக்க சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மக்கள் நல உரிமை அமைப்பாளரும், இந்திய ஜனநாயக கட்சி(தென்மாநில இணை செயலாளருமான அருணாதேவி ரமேஷ் பாண்டியன் மனு அளித்துள்ளார்.
அவரது மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது;
.கடந்த சில மாதங்களாக தென் மாவட்டங்களில் சாதி ரீதியான கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் பெண்கள் விதவைகளாகவும், பெற்றோர்கள் பிள்ளைகளை இழந்து அனாதைகளாகின்றனர். பொதுமக்களின் அமைதியான வாழ்க்கை சூழல் கேள்விக்குறியாகும். சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம் பட்டி என்ற கிராமத்தில் நந்தகுமார் என்ற இளைஞர் நடு ரோட்டில் பட்டாபகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரை நம்பி வயதான தாயாரும், இரண்டு சகோதரிகளும் உள்ளனர் ஆனால் இனி அவர்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பாக ஆண் மகன் இல்லாத பரிதாப சூழலை உருவாக்கி உள்ளது. இதனால் சாதி ரீதியான கலவரங்கள் வெடிக்கும் சூழல் உருவாகும்.
ஆகவே தமிழக அரசாணது சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து சாதிய கொலைகளுக்கு காரணமான நபர்களுக்கும்,கொலை குற்றவாளிகளுக்கும் அதிகபட்ச தண்டனை வாங்கி தருவதோடு இனி இதுபோன்று சாதிய கொலைகள் நடைபெறா வண்ணம் இரும்பு கரம் கொண்டு துரித நடவடிக்கை எடுத்து தென்மாவட்ட மக்களிடையே சாதிய பாகுபாட்டை கலைந்து சகேதரத்துவத்தை உருவாக்கிட உடனடியாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மனு நகல் அனைத்தும் கீழ் கண்ட துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.தமிழக முதல்வர் தனி பிரிவு சென்னை,தமிழக காவல் துறை தலைவர்,சென்னை தென்மண்டல காவல் துறை தலைவர்,மதுரை, தென்மண்டல காவல்துறை துணை தலைவர் திருநெல்வேலி,
R. அருணா தேவி ரமேஷ் பாண்டியன் BA.LLB.,மக்கள் நல உரிமை - (அமைப்பாளர்)இந்திய ஜனநாயக கட்சி(தென்மாநில இணை செயலாளர்)தூத்துக்குடி மாவட்டம்தொலைபேசி எண்; 9025757684