ஒட்டப்பிடாரம் புதியம்புத்தூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் - எம்எல்ஏ சண்முகையா கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

ஒட்டப்பிடாரம் புதியம்புத்தூரில்  மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் - எம்எல்ஏ சண்முகையா கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

தமிழக முதலமைச்சர் மு க.ஸ்டாலின் தொடங்கி வைக்கப்பட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதியம்புத்தூர் புதூர் பாண்டியாபுரம் ஜம்புலிங்கபுரம் தெற்கு வீரபாண்டியபுரம் சாமிநத்தம் சில்லாநத்தம் ஆகிய ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் புதியம்புத்தூர் ஜான் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

முகாமில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா மாற்றம் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

மேலும் முகாமில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரியிடம் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்

.

இந்த முகாமில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் வட்டாட்சியர்கள் சுரேஷ் செல்வகுமார் சுசிலா மாவட்ட வழங்கல் அலுவலர் உஷா வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி நகர செயலாளர் லிங்கராஜ் மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன் ஒன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் நல்லமுத்து கிளைச் செயலாளர்கள் பாலகுருசாமி சற்குணபாண்டியன் சிவமுருகன் தொண்டரணி கோபால் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.