திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் குடிநீர் பைப்பில் உடைப்பு; சரிசெய்ய அகில இந்திய மனித உரிமைகள் கவுன்சில் மாவட்டத் தலைவர் என். சுரேஷ் கோரிக்கை!.

திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் குடிநீர் பைப்பில் உடைப்பு; சரிசெய்ய அகில இந்திய மனித உரிமைகள் கவுன்சில் மாவட்டத் தலைவர் என். சுரேஷ் கோரிக்கை!.

திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் குடிநீர் பைப்பில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீருடன் குடிநீர் கலந்து வருவதைக் இரண்டு மாதமாக கண்டுகொள்ளாத நகராட்சி, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அகில இந்திய மனித உரிமைகள் கவுன்சில் மாவட்டத் தலைவர் என். சுரேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம்' அருகே ஒரு உணவகம் முன்பு இரண்டு மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு கழிவு நீருடன் குடிநீரும் கலந்து வருகிறது. அதனை நகராட்சி நிர்வாகம் இதுவரை கண்டுகொள்ளவில்லை. இந்த குடிநீர் குழாய் கோயில் வளாகம் மற்றும் TB ரோடு குடியிருப்புகள் மற்றும் தனியார் விடுதிகளுக்கு செல்வதாக கூறப்படுகிறது இரண்டு மாதமாக உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி சாக்கடையாக மாறி துர்நாற்றம் வீசுகிறது. 

மேலும் கொடிய நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தி ஆகி வருகின்றது. மாவட்ட நிர்வாகம் இதனை உடனடியாக சரி செய்ய வேண்டுமென்று அகில இந்திய மனித உரிமைகள் கவுன்சில்  சார்பில்  என்.சுரேஷ் தூத்துக்குடி  மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.